Sunday, June 10, 2012

என் காதலின் கடைசி ஆசை

 பெண்ணே உன் 
புன்னகையை நிறுத்தி கொள் 
உன் புன்னகையால் புன்னகையை மறந்த 
நானும் கொஞ்சம் புன்னைகைத்து பார்க்கிறேன்... 

பெண்ணே உன் 
மௌனத்தை திறந்து விடு 
உன் மௌனத்தால் ஊமையான 
நானும் கூட சில வார்த்தைகள் பேசி பார்க்கிறேன்.... 

பெண்ணே உன்
கண்களை மூடி கொள்
உன் கண்களால் காட்சியிழந்த
நானும் கண் திறந்து பார்த்து கொள்கிறேன்....

பெண்ணே உன்
இதயத்தை திறந்து விடு
உன் இதயத்தில் சிறைபட்ட
நானும் சுதந்திரமாய் சுற்றி பார்க்கிறேன்....

பெண்ணே உன்னோடு
சேர்த்துகொள் என்னை
நானும் சில நாள் உயிரோடு வாழ்ந்து பார்க்கிறேன் உன் அரவணைப்பில்....

ஏனடி ஏமாற்றினாய்?


வலிக்கிறது என் இதயம் வலிக்கிறது நீ வேறொருவனிடம் இளிக்கையிலே,
பல நாள் காதலுடன் என் காதலி உன்னுடன் பல நொடிகளை கழிக்க
வந்தவனை சில நொடிகளில் சிதறடித்தாயடி,
உன் கைப்பிடித்து பல கதைகளை பேச வந்தேன் நான் நீ வேறொருவனின்
கைப்பிடித்து பேசி எனை கைம்மாணாக்கினாயே,
யாரும் கொள்ளாத காதலை நான் கொண்டிருந்தேன் உன்மேல்
நீயோ இன்று யாரோ ஒருவனுடன்,
தேவதையே உன்னை தேடி பல பூஞ்சோலைகளில் அலைய வேண்டுமென
எண்ணினேன், ஆனால் நீ தெருவோரத்தில் தேவையில்லாதவனுடன்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அழியாமலிருக்க நம் காதலை கல்வெட்டில்
செதுக்க நினைத்தேன் "நீயே" அதன் மேல் முள் வெட்டி போட்டாயடி,
என் ஆசைகள் சிறகடித்து வானில் பறவையாக பறந்ததடி உனை காணப் போகிறேன்
என்று நீயோ இன்று சிறகொடித்தாய் அதற்கு,
என் விழிகளில் பதிந்தவள் உன்னை வேறு ஒருவனுடன் வழிவதை
பார்க்கையிலே விழிகளில் வழிகிறது இரத்தக் கண்ணீர்,
உன்னை கொன்று விடவே துடிக்கின்றது நீ குடிகொண்டுள்ள இதயம்
அதன் உள்ளுள்ள காதல் அதனை மிஞ்சி உன்னை விடுகின்றது,
என்ன செய்கிறாய் தெரிகிறதா என்னவளே உண்மைக் காதலை உதைக்கிறாய் எட்டி,
எமன் வந்தாலும் செல்வேன் நான் இப்போது எம் உமையவளே என்னை ஏமாற்றிய பிறகு,
உயிருடன் சேர்த்துவைத்துள்ளேனடி உன்னை நீ வேறொருவனுடன்
சேர்ந்திருப்பது என்ன நியாயம்,
உன்னை சிறப்பாக சிரம் மேல் வைத்து காக்கவே காதலித்தேன் நீ வேறு ஒருவனின்
கரத்தைப் பிடித்து கதைக்கையில் என் கழுத்து காணாமல் போனது,
ஏன் பெண்ணே ஏமாற்றினாய் ஏன்????????

Friday, May 4, 2012

வலிதீர வழி என்ன


பாவையே.....

இடைவெளிவிட்டு துடிக்கும்
என் இதயம் கூட...

இன்று இடைவெளி இல்லாமல்
அழுகிறது...

உன் பிரிவால்...

என் அழுகுரலே உனக்கு
கேட்கவில்லை...

என் இதயத்தின் அழுகுரலா உனக்கு
கேட்டிருக்க கூடும்.....


நீ பறித்து போன என் இதயம்


நீ பறித்து போன என் இதயம்
எங்கே?
உன் முகம் பார்த்து மலரும் தாமரையாய் இருந்த
என் கண்கள் இன்று மலராமல்....

உன் குரல் கேட்டு விடியும் என்
நாட்கள் இன்று விடியாமல்......

எப்போதும் சின்னுங்கி கொண்டு இருக்கும்
கைபேசி
இன்று எங்கோ ஒரு முலையில் முடமாகி கிடக்கிறது.....

நீ இல்லாத நாட்கள் நகர மாறுகின்றன...
உன் அருகாமை இல்லாத உலகம் எனக்கே அந்நியமாய்....

போதும் இந்த தண்டன்னை...

என்னதான் கேட்கிறாய்?
இந்த பலாய்போன காதலை மீண்டும் உயர்பிக்க.....


பிரிவை எதிர்நோக்கும் காதல்...!


அன்று... நீ காதலை சொன்னாய்...
மனதில் ஏதோ மத்தாப்பு சாரல்...
இதயத்தில் தேன் மழை
இனம் புரியா சந்தோஷம்...
புதிதாய் பிறந்த உணர்வு...
அது வரையில்
உன்மேல் இருந்ந அன்பு
காலப்போக்கில் காதலானது...
உலகம் அழகானது...
ஆனால்...
நாட்கள் செல்லச் செல்ல
இதயத்தில் வளரும்
காதலுக்கு போட்டியாய்
மனதில் பயம் வளர்கிறது...
என் விழியில்
கண்ணீர் துளிகளை
காணாத நான்
என் இதயத்தில்
ரத்தம் கசிவதை உணர்கிறேன்...
வாழ்க்கை இருட்டானது...
நான் கேட்காமல்
கடவுள் கொடுத்த பரிசு
நீயும்... உன் காதலும்
கையருகில் நீ இருந்தும்
நமது இரு கரங்கள்
இணையாதென்பது நிஜம்...
நம் காதல் தோற்கையில்
அதற்கு ஆயிரம் காரணங்கள்
சிதறி கிடக்கும்...
ஆனால்,
நம் காதல் ஜெயித்தால்
அதற்கு ஒரே காரணம்
நம் காதல் உண்மையானது...!

உன் நினைவுகள்
யாரும் கொடுக்க முடியாத
வேதனை...
யாராலும் திருட முடியா
பொக்கிஷம்...! 

Monday, March 5, 2012

என்னவளே எனக்கு இன்னும் கொஞ்சம் வலிகொடு ! நான் வலிகளை எழுதுவதில் வைர முத்துவை தோற்கடிக்க வேண்டும் !

வலிகளே வாழ்கையானதோ ?
அன்பே ! நிரந்தரம் உன் பிரிவு என்றால்
இன்றே மரிப்பேன் என் உயிரை !
விழிகளோரம் உன் நினைவுகள் கண்ணீராக !
விதி மட்டும் ஏங்குதடி உன்னையும்
என்னையும் சேர்க்க !

கண்ணில்லாத இந்த காதல்
என் கண்ணீர்க்கு மட்டும் சொந்தமானதேனோ !
உண்மையோடு பிறந்த இந்த காதல்
இன்று நடு வழியில் ஊனமாக !
என் வலியின் ஆழத்தை நான் அவளுக்கு
இதுவரை உணர்த்தவில்லை !
தாங்க மாட்டாள் அந்த பிஞ்சு இதயத்துக்கு
சொந்தக்காரி !

காதலித்து திருமணம் செய்து கொண்ட
அவளது பெற்றோர்களே ! உங்களுக்கு தெரியாதா ?
அளவிட முடியாத அந்த வலியின் ஆழம் !
மனம் முழுவதும் மணம் வீசிய என் ரோஜா
இன்று தனி அறையில் தனி மரமாக !
காரணம் இல்லாமல் பிரிக்க துடிக்கும்
உன் பெற்றோர் !

கண்ணீர் மட்டும் போதாதடி !
உன் நினைவுகளை அழிக்க !
என்னவளே எனக்கு இன்னும் கொஞ்சம் வலிகொடு
நான் வலிகளை எழுதுவதில்
வைர முத்துவை தோற்கடிக்க வேண்டும் .....

Tuesday, February 28, 2012

ஆ..பாசங்கள்....

பண்பாட்டின் பிறப்பிடம் ...
பயணிக்கிறது பயந்து கொண்டே ...
மறைத்து வைக்கப்பட்ட மானம்
மறைவாய் திரையிட படுகிறது ..!!!

ஒழுக்கத்தின் உறைவிடம்
ஒன்றாம் வகுப்பறையிலேயே
ஒழித்து வைக்கபடுகிறது
ஒ... முன்னேற்ற முதற் படி !!!!

கல்வியின் கலங்கரை க்கு
கட்டும் சமாதி யுத்திகளை
கற்கும் கல்வி கூடங்களில்
காண்கிறோமே .. காட்சிகளை!!!

திறந்த வழி படிப்பு
பல்கலை கழகங்களில் மட்டுமல்ல
சிறந்த வகை மொபைல் (கைபேசி ) கூட
எல்லா படிப்பு பிரிவுகளும்
கற்பித்து கொடுக்கிறது (ஆபாசங்களை) !!!

காதல் என்பது கட்டாய பாடம்
கல்வி என்பது விருப்ப பாடம்
கல்லூரி வளாகங்களில் ..
பீச்சுகள் சீ ...சீ ... ஆனது
பூங்காக்கள் ... பொலிவிழந்தது


நண்பேண்டா...அவன்தான்
கணிபொறி ..இன்டெர் நெட்
காமாட்சி ...யினை காண
கணி பொறி தேடலில்
கா..என்று தட்டும் நொடியில்
கா .யில் ஆரம்பிக்கும்
காம படங்கள் ...காம கதைகள்
என்று.. தானே காண்பிக்கும்
கணிபொறி நண்பன் ..

எத்தனை அறிவியல்
என்ன என்ன கண்டு பிடித்தாலும்
அதில் காண கூடாததை
தேடி கொண்டிருக்கும்
கடமை உள்ள மாணவர்கள் ...

புத்தகம் தவிர அனைத்தையும்
சுமக்கும் மாணவர்கள் ..
புத்தகம் தவிர அனைத்தையும்
இழக்கும் மாணவிகள்...
மதிப்பெண் குறைந்தால்
மரணம் தேடும் ஒரு கூட்டம்..

திருமணம் இன்றும்
சொர்க்கத்தில் தான்
நிச்சயிக்க படுகிறது
ஆனால் அதற்க்கு முன்
சில இடங்களில்
ஒத்திகை நடை பெறுகிறது ...

பரிதவிக்கும் பாச பெற்றோர்
அண்ணார்ந்து பார்க்கும் ஆசிரியர்கள்
கவலையில் காணும் காவலர்கள்
எல்லோரும் இப்படி இருக்க
இன்னுமாய் தொடர்கிறது ..
பண்பாட்டின் பிறப்பிடம் ...
பயணிக்கிறது பயந்து கொண்டே ...